Learn Python Basics in Tamil
Python programming basics - தமிழில் கற்றுக்கொள்ளுங்கள்
Description
வணக்கம். இன்றைய கணினி உலகில், மிகவும் பிரபலமான programming language-ல் ஒன்றாக Python மாறியுள்ளது. கணிப்பொறி செயல்பாட்டு மொழிகளை தமிழில் கற்றுக்கொள்ளவும், பயிற்சி செய்து பயன்பெற தேவையான தகவல்களையும் காணொளி வாயிலாக தொகுத்து வழங்கி வருகிறேன். இதில் வழங்கப்படும் தகவல்கள் தமிழ் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும், தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலத்திலும் தொகுக்கப்பட்டிருக்கும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
இந்த பாடத்தின் மூலம் Python-ஐ மிகவும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். Python-ஐ பலவிதமான operating systems-ல் இயங்க வைக்க முடியும், client application மற்றும் cloud platform-லும் இதனை இயங்க வைக்கலாம். இதில் வழங்கப்படும் tools மற்றும் libraries, நம்முடைய பல்வேறு programming தேவைகளுக்கு ஏற்றவாறு உள்ளது. Web Development, Web scraping, Testing, Big Data, Game Development போன்ற பல்வேறு programming தேவைகளுக்கு Python-ஐ பயன்படுத்தி applications-ஐ உருவாக்கலாம். இந்த பாடத்திட்டத்தில், Python programming language-ற்க்கான நேரடி அறிமுகத்தைப் பெறுவீர்கள். உங்கள் கணினியில் Python நிறுவப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது? அது ஏற்கனவே இல்லை என்றால் அதை எவ்வாறு நிறுவுவது? என்பதையும் பார்க்கலாம். அடுத்ததாக, நமது முதல் Python program-ஐ ஒரு சில வரிகளில் எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். Python language-ன் அடிப்படைகள், data types, variables, loops, functions, classes என அதில் இருக்கும் பல அடிப்படைகளை நாம் கற்றுக் கொள்வோம். Python-ல் வழங்கப்பட்டிருக்கும் dates, times, files and directories போன்ற data types-ஐ நாம் பயன்படுத்தி பார்க்கலாம். இறுதியாக இணையத்திலிருந்து எவ்வாறு HTML, XML, மற்றும் JSON தரவுகளை Python-ன் libraries-ஐ பயன்படுத்தி download செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம். cross-platform applications-ன், அடுத்த தலைமுறைக்கான applications-ஐ உருவாக்க Python-ஐ கற்று கொள்ள ஆரம்பிப்போம்.
நீங்கள் ஆரம்பநிலை Python programming language-ஐ தெரிந்துகொள்ள விரும்பினால், இது கண்டிப்பாக உங்களுக்கான ஒரு பாடத்தொகுப்பு. இதை என்னால் முடிந்தவரை தமிழில் தர முயற்சி செய்திருக்கிறேன். தவிர்க்க முடியாத இடங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப வார்த்தைகளை, அப்படியே ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறேன். அது Python-ஐ பயன்படுத்த, உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாருங்கள்! தொடர்ந்து பார்க்கலாம்.
What You Will Learn!
- Introduction of Python programming and installation
- Learn basics of Python programming (Variables and expressions, functions, conditional structures, loops, classes, modules and exceptions)
- Working with files and operating system utilities
- Dates, Time and Calendar in Python
- HTML, JSON and XML format handling
Who Should Attend!
- Beginner Python programmers who wish to start learning.