தமிழ் வழியில் பேஜ்மேக்கர் கற்றுக்கொள்ளுங்கள்

நீங்களும் இனி டிடிபி டிசைனர்தான்

Ratings: 4.58 / 5.00




Description

வணக்கம்,

நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி சி புரோகிராமிங் , சி ++ போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.

தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் டிடிபி மென்பொருளான பேஜ்மேக்கர்  பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியை பிரஸ் மற்றும் செய்திதாள் நிறுவனங்களுக்கு டிசைனராக செல்லவிரும்புவோர்  மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் அனைவரும் பயிலலாம்.  ஆங்கில அறிவு இதற்கு அவ்வளவாக தேவைபடாது. செல்போன் நாம் எப்படி பயன்படுத்திகிறோமோ அதே போன்று பேஜ்மேக்கர் மென்பொருளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

நீங்கள் +2 வில் ஆர்ட்ஸ் குருப்  மாணவராக இருந்தால் அல்லது கல்லூரியில் விஸ்வல் கம்யுனிக்கேஷன்   படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, ஊடக துறைக்கு செல்ல விரும்புகிறவராக இருந்தாலும் இந்த பயிற்சி உங்களுக்கு உதவும்.

தனியார் பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொள்ள ரூ 5000 முதல் ரூ.8000 வரை செலுத்தி படிக்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த  பேஜ் மேக்கர்  பயிற்சியை இங்கு மிக குறைந்த கட்டணத்தில் படிக்க இருக்கீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறோம்.

அனைத்து பாடங்களும் நாங்கள் உங்களுக்கு நேரிடயாக சொல்லி தருவது போல் உணரவும் அளவிற்கு பயிற்சி விடியோக்கள் தயாரித்து வழங்கி உள்ளோம்.

கணிணி கல்வி துறையில் எனது 20 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.

இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

க.சிவா

உடிமி ஆசிரியர்,

What You Will Learn!

  • பேஜ் மேக்கர் மென்பொருள் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் மென்பொருள் பயன்படுத்தி ப்ரஸ் வேலைகளுக்கான டிசைன் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் பயன்படுத்தி விசிடிங் கார்ட், திருமண பத்திரிக்கை, புத்தகம் போன்றவைகளை எவ்வாறு டிசைன் செய்வது பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் டூல்கள் பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் மெனுக்கள் பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் பயன்படுத்தி விளம்பர நோட்டீஸ் தயார் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வீர்கள்
  • பேஜ் மேக்கர் மென்பொருள் பயன்படுத்தி பிரஸ்க்கு தேவையான மாஸ்டர்கள் எடுப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வீர்கள்

Who Should Attend!

  • பிரஸ்ஸில் டிசைனராக வேலை செய்ய விரும்புகிறவர்கள்
  • புத்தகங்கள் தயாரித்து ஆன்லைனில் விற்க விரும்புகிறவர்கள்
  • பிரஸ் வைத்து இருந்து டிசைனர் இல்லாமல் தடுமாறுகிறவர்கள்
  • பிரிண்டிங் பிரஸ் வைக்க விரும்புகிறவர்கள்
  • பள்ளி படிப்போடு நின்றவர்கள் டிசைனராக மாறவிரும்புகிறவர்கள்